×

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாக 136 கட்டணமில்லா சேனல்கள் 82 கட்டணத்துடன் கூடிய  சேனல்கள் என மொத்தம் 218 சேனல்களை ரூ.140 மற்றும் ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்து ஒளிபரப்பு செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே கடந்த 19-ம் தேதி ஒளிபரப்பு சேவையில் நடைபெற்ற இடையூறு சம்பந்தனமாகவும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

வரக்கூடிய நாட்களில் இதுபோன்ற இடர்பாடு இல்லாமல் உயர்தொழில் நுட்பத்தில் அரசு கேபிள் டிவி மூலமாக சேனல்களை ஒளிபரப்பு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சந்தை நிலவரங்களை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கவும், OTT, VOD, IPTV, உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள்வரவுள்ளது.

அதனடிப்படையில், புதிய சேனல்களை சேர்த்து புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி OTT, VOD, IPTV, உள்ளிட்டவற்ற HD செட்டாப் பாக்ஸ்கள் மூலமாக வழங்குவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்த்தில் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக OTT, VOD, IPTV, உள்ளிட்டவைகள் எல்லாம் கேபிள் டிவி மூலமாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனை 6 மாத காலத்திற்குள்ளாக இதற்கான பணிகளாய் தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் இன்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வு கூட்டத்த்தில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு கூடுதல் நிதித்துறை செயலாளர் முருகானந்தம், தமிழக தகவல் தொழில்நுட்பதுறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Government Cable TV Company , Govt Cable TV Company, Officers, Chief Minister M.K.Stal's advice
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...